
புற்றுநோய் பராமரிப்பை பொறுத்தவரையில், நாங்கள் தேர்ந்தெடுக்கும் வழியே இறுதியில் சென்றடையும் இடத்தை தீர்மானிக்கின்றது. ஆசிரி AOI புற்றுநோய் நிலையத்தில் நாங்கள் முழுமையான புற்றுநோய் பராமரிப்பினை எமது நோயாளர்களின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றோம். புற்றுநோய் சிகிச்சை என்பது பன்முக வகைகளைச் சேர்ந்த சிகிச்சைகள் தொடக்கம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் தீவிரமான உணர்வு ரீதியான ஆதரவு என்பன வரையில் மிகவும் சிக்கலான ஒரு சிகிச்சை முறையாக இருந்து வருகின்றது என்ற விடயத்தை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். எமது ஒவ்வொரு நோயாளியினதும் குடும்பத்தினருக்கு துணை நிற்பதற்கு நாங்கள் எம்மை அர்ப்பணித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு படிமுறையின் போதும், ஒவ்வொரு விபரத்தை கவனத்தில் எடுக்கும் போதும், தனிப்பட்ட இயல்பிலான மற்றும் கருணையுடன் கூடிய பொருத்தமான புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் விடயத்திலும் நாங்கள் அவர்களை எமது பங்காளர்களாக கருதி செயற்பட்டு வருகின்றோம். ஆசிரி AOI நிலையத்தின் மிகத் துல்லியமான சிகிச்சை முறை, ஐக்கிய அமெரிக்காவில் (தீங்கிழைக்கும் உடல் கட்டிகள் / கழலைகள் ஏற்படுத்தும்) புற்று நோய்களுக்கு சிகிச்சை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிலையத்துடன் கூட்டாக இணைந்து வழங்கப்பட்டு வருகின்றது. ஆசிரி AOI நிலையத்தில் நாங்கள் ஒவ்வொரு நோயாளருக்கும் அவருடைய தேவைக்குப் பொருந்தக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த பராமரிப்பு மாதிரி ஒன்றை வழங்கி வருகின்றோம்.
எமது அனைத்துமடங்கிய புற்றுநோய் பராமரிப்பு நிலையம் மருத்துவ, கதிர்வீச்சு மற்றும் அறுவை மருத்துவத் துறைகளில் உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பினை வழங்கி வருகின்றது. அதி நவீன ரேடியோக்கதிர் நோய் நிர்ணய PET சேவைகள் மற்றும் நோய் நிர்ணயத்துறை சேவைகள் என்பவற்றுடன் இணைந்த விதத்தில் இந்தப் பராமரிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே, அது நோய் நிர்ணயமாக இருந்து வந்தாலும் சரி அல்லது சிகிச்சையாக இருந்து வந்தாலும் சரி, புற்றுநோய் பராமரிப்பில் எதிர்கொள்ள நேரிடும் எந்த ஒரு சவாலையும் கையாள்வதற்கு தேவையான நிபுணத்துவத்தை நாங்கள் கொண்டுள்ளோம். பயிற்றப்பட்ட மற்றும் காருண்யத்துடன் கூடிய தாதியர் பணியாளர்களின் பக்கபலத்துடன் பன்முகத் துறைகளில் உயர் தகைமைகளை பெற்றுக்கொண்டிருக்கும் சிகிச்சை வல்லுனர்களுடன் இணைந்த விதத்தில் இலங்கையில் புற்றுநோய் பராமரிப்பில் அதியுயர் சேவையை வழங்கும் விடயத்தில் நாங்கள் முன்னணி ஸ்தானத்தில் இருந்து வருகின்றோம்.

பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரையில் புற்றுநோய் என்பது தனியொரு நோயாக நோக்கப்படுகின்றது. எனினும், 200 வகைகளுக்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான புற்றுநோய்கள் இருந்து வருவதுடன், அவை ஒவ்வொன்றும் ஆரம்ப கட்டத்தில் அல்லது முற்றிய கட்டத்தில் இனங்காணப்பட முடியும். வினைத்திறன் மிக்க புற்றுநோய் பராமரிப்புக்கு கூட்டாக முன்னெக்கப்படும் ஒரு பல்துறை சார் அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த அணுகுமுறையில் புற்றுநோய் மருத்துவர், கதிரியக்கச் சிகிச்சை மருத்துவர் மற்றும் அறுவை மருத்துவர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து ஒவ்வொரு நோயாளி தொடர்பாகவும் மிகச் சிறந்த முகாமைத்துவ முறை எது என்பதனை தீர்மானிக்கின்றார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புற்றுநோயாளர்களுக்கு இந்த அனைத்து மூன்று துறைகளையும் உள்ளடக்கிய விதத்திலான சிகிச்சை முறை ஒன்று தேவைப்படுகின்றது. மேலும், அந்தச் சிகிச்சை, தரநியமத்துடன் கூடிய சிகிச்சை முறைகள் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதும் முக்கியமானதாகும். இந்தச் சிகிச்சை முறைகள், தென்னாசியப் பிராந்தியத்தையும் உள்ளடக்கிய விதத்தில் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சைகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டிருக்கும் சான்றுகளை பயன்படுத்தி, அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஆசிரி AOI புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த நாங்கள் புதிய தலைமுறை கதிர்வீச்சு சிகிச்சை முறை ஒன்றை (Linear Accelerator) துவக்கி வைத்திருப்பதுடன், அது இலங்கையில் வழங்கப்படும் மிக முன்னேற்றகரமான சிகிச்சையாக இருந்து வருவதுடன், தென்னாசியாவில் வழங்கப்பட்டு வரும் ஒரு சில தலைசிறந்த சிகிச்சைகளில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. எமது உடல் கட்டி மருத்துவச் சபை பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிலையத்தின் முன்னணி புற்றுநோய் வல்லுனர்களை கொண்டுள்ளது. பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழத்தின் மருத்துவ நிலையமே இந்த நிபுணத்துவத்தை இலங்கையில் வழங்கும் ஒரேயொரு புற்றுநோய் நிலையமாக இருந்து வருகின்றது.
புற்றுநோய் மருத்துவர்கள் (Oncologists) மற்றும் அறுவை மருத்துவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய எமது அணி அனுபவம் மற்றும் தகைமைகள் என்பவற்றின் அடிப்படையில் களத்தில் முன்னணியில் இருந்து வருகின்றது. மிக முக்கியமாக எமது தாதியர் மற்றும் துணை மருத்துவ தொழில்நுட்பவியாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு புற்றுநோயாளிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குவதற்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்.

அமெரிக்க புற்றுநோயியல் நிறுவனம் (American Oncology Institute - AOI)
அமெரிக்க புற்றுநோயியல் நிறுவனம் (AOI) தென்னாசியாவில் புற்றுநோய் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். அது இந்தியா மற்றும் தென்னாசியா ஆகிய பிராந்தியங்கள் நெடுகிலும் உள்ள பல்வேறு நகரங்களில் புற்றுநோய் மருத்துவமனைகளின் ஒரு சங்கிலித் தொடரை இயக்கி வருகின்றது. பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிலையத்தின் (UPMC) பல தசாப்த கால அனுபவத்துடன் கூடிய முன்னணி புற்றுநோய் வல்லுனர்களின் குழு ஒன்றினால் AOI நிறுவனம் 2006ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. புற்றுநோய் தொடர்பான ஐக்கிய அமெரிக்க சிகிச்சை முறைகளை ஆசிய உபகண்டத்திற்கு எடுத்துவரும் நோக்குடன் இது நிறுவப்பட்டது. பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தின் புற்றுநோய் நிலையங்கள் 1990 களின் பிற்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டன. இப்பொழுது அவை நன்கு ஒழுங்கமைந்த ஒரு கட்டமைப்பில் இருந்து வருவதுடன், 40க்கும் மேற்பட்ட பிராந்திய அமைவிடங்களில் செயற்பட்டு வருகின்றன. அந்த நிலையங்களில் 200 க்கு மேற்பட்ட புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் வருடாந்தம் சுமார் 75,000 புற்றுநோயாளர்களுக்கு பராமரிப்பை வழங்கி வருகின்றார்கள். இது 25,000 புதிய நோயாளர்களையும் உள்ளடக்குகின்றது. மேலும் வாசிக்கவும் மேலும் வாசிக்க